அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரை, பிரபல உளவியல் இதழ் ஒன்றில் பிரசுரமாகியுள்ளது. பெரும்பாலும் தற்கொலை உணர்வு 20 வயது முதல் 24 வயதில் ஏற்படுகிறது. இதற்கு, அதிகப்படியான மனஅழுத்தம், எதிர்பார்ப்பு, தற்கொலைக் சிந்தனை, சுயமான தீங்கிழைவிக்கும் எண்ணங்கள் காரணமாக அமைந்துவிடுகின்றன.
உடன்பிறப்புகள்
இதுமட்டுமின்றி, பெரும்பாலும் நம்மை தற்கொலைக்கு தூண்டுபவர்கள் என்ற இடத்தில் முதலில் இருப்பது நமது சகோதரர்கள் (அதாவது அன்பு உடன்பிறப்புகள்). அவர்களிடம் போடும் சண்டை கூட, சில நேரங்களில் நம்மை தற்கொலைக்கு தூண்டிவிடுகிறதாம். சகோதரர்களுடன் சண்டையிடும்போது, ஏற்படும் மன அழுத்தம் மிகவும் அதிகமாக இருக்குமாம். ஆகவே உங்களது சகோதரர்களிடம் கவனமாக இருங்கள்.
இதற்கு அடுத்த இடத்தில் நண்பர்கள் இருக்கின்றனர். அவர்களின் கேலி, கிண்டல் கூட தற்கொலை உணர்விற்கு கொண்டுசென்று விடுமாம். மேலும் கல்லூரி, பள்ளிக்கூட நிகழ்வுகள்கூட தற்கொலைக்கு காரணமாக அமைந்துவிடுகிறாம்.
சில தற்கொலைகள் பெற்றோரின் அதீத கண்டிப்புகளால் நிகழ்கிறது. வீட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் கூட சில சமயங்களில் கடினமாக சூழலுக்கு இழுத்துச் செல்கிறாம்.
ஆய்வு அறிக்கை
அந்தக் கடின சூழலில் முதலிடம் வகிப்பது உடன்பிறப்புகள்தான். அவர்களிடம் போடும் சண்டை, சமாதானம் ஆகும்வரை தூங்க விடாது என்கின்றனர் ஆய்வாளர்கள். சில சமயம், இந்தக் கோப உணர்வு வாழ்நாள்வரை தொடரும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மூவாயிரத்து 881 இளைஞர்களில் 31.2 விழுக்காட்டினர் உடன்பிறப்புகளிடம் ஏற்பட்ட சண்டை காரணமாக தற்கொலைக் செய்துகொண்டவர்கள். இதில் 15.1 விழுக்காட்டினர் மருத்துவ சிகிச்சை அழுத்தம் காரணமாகவும், 35.7 விழுக்காட்டினர் தற்கொலை சிந்தனைகளால் உந்தப்பட்டும், 16.1 விழுக்காட்டினர் சுய தீங்கு எண்ணங்களாலும் மீதமுள்ள 4.9 விழுக்காட்டினர் ஏதோ நோக்கத்திற்காகவும் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
இது குறித்து வார்விக் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் சிலவா டான்செவ் கூறும்போது, உடன்பிறப்புகளால் அதிக தற்கொலை நிகழ்கிறது என்ற தகவல் வெளியான முதல் ஆய்வு இது. பள்ளி, கல்லூரி அழுத்தங்களும் தற்கொலைக்கு காரணமாக திகழ்வதை காணமுடிகிறது. பள்ளி, கல்லூரிகளை காட்டிலும் வீடே தற்கொலைகளுக்கு முக்கியக் காரணமாகத் திகழ்கிறது.
இதையும் படிக்கலாமே
குடும்ப பிரச்னையில் மனைவியின் சமாதியில் விஷம் அருந்தி கணவன் தற்கொலை