இந்தியாவில் தற்போது அறுவை சிகிச்சை முறை அதிகரித்திருப்பது அனைத்து தரப்பு மக்களும் அறிந்த ஒன்று.
2015 - 2016ஆம்ஆண்டில் கடைபிடிக்கப்பட்ட பிரசவ முறைகள் தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட தேசிய சுகாதார மற்றும் குடும்பநல கருத்துக்கணிப்பின் முடிவில், இந்தியாவை அச்சுறுத்தும் இரண்டு முக்கிய பிரச்னைகள் குறித்ததகவல்வெளியாகியுள்ளது.
அறுவை சிகிச்சை நல்லது:
வளரும் நாடுகள் பட்டியலில் உள்ள இந்தியாவில் பல்வேறு தரப்பு மக்களும் வசித்துவருகின்றனர்.பல்வேறு ஏற்றத்தாழ்வுகளோடு கூடிய இந்த நாட்டில், அதிக பணம் படைத்தவர்களும் உண்டு ,வறுமையில் வாடுபவர்களும் உண்டு.
பணம் படைத்தவர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்கள், நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பிரசவம், அறுவை சிகிச்சை முறைப்படியே அதிகம் நடத்தப்படுவதாக தேசிய சுகாதார மற்றும் குடும்பநல கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கடந்த 2005-2006ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட முதல் கருத்துக்கணிப்பின் முடிவில் "சிசேரியன்" கலாசாரம் அதிகரித்துவருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தற்போது, 2010 முதல் 2016 வரையிலானஆறு ஆண்டுகளைஅடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சமீபத்திய கருத்துக்கணிப்பில், சுமார் 17.2 விழுக்காடு சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை முறைப்படியே இந்தியாவில் குழந்தைகள் பிறந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வலி இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ள சிசேரியன் முறையே சிறந்தது என்றும், நாம் விரும்பும்நல்ல நேரத்தில் குழந்தையை பிறக்க வைக்கலாம் என்றும் சில மருத்துவமனைஆசை காட்டிவருதாகவும் ஒரு பக்கம் கூறப்படுகிறது.