கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களின் அன்றாட வாழ்வின் பல செயல்களும் கேளிக்கைகளும் முடங்கிப்போய் உள்ளன. அந்த வகையில் ஆண், பெண் என இரு பாலரும் அழகை மேம்படுத்த பார்லர்கள் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையில் தற்போது முற்றிலும் தடைபட்டுள்ளது.
இதைப் போக்கும் வகையில், ஆந்திர மாநிலம், அம்ருதா ஆயுர்வேத மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் நிர்மலா தேவி சருமப்பொலிவு, கூந்தல் பராமரிப்பு குறித்த ஆலோசனைகளை நம்மிடையே பகிர்கிறார்.
சருமம்:
- சருமம் உடனடி பளபளப்பைப் பெற முட்டைக் கரு மற்றும் வெண்ணெய்யை உபயோகித்து க்ரீம் தயாரித்து உபயோகிக்கத் தொடங்கலாம்.
- முகப்பரு இருந்தால், நட்மெக் எனப்படும் ஜாதிக்காய் பொடி, சந்தனப் பொடி, மிளகுப் பொடி ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து, பாலில் அதை சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி வரலாம். முகப்பருப் பிரச்னைகளுக்கு இது ஒரு நல்ல நிவாரணி.
சருமக் கோளாறு:
- வேப்பம்பொடி, நெல்லிக்காய்த் தூள் ஆகியவற்றைக் கலந்து, நெய்யுடன் சேர்த்து உண்டு வந்தால், எல்லாவித சருமக் கோளாறுகளும் நீங்கும்.
- வெல்லத்துடன் கலந்த இஞ்சி சாறும் சருமக் கோளாறுகளுக்கு சிறந்தது.