டெல்லி: லத்தீன் அமெரிக்க நாடுகளில் லாம்ப்டா என்ற புதிய வகை உருமாறிய கரோனா நோய்க் கிருமி பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு, “லாம்ப்டா என்ற உருமாற்றம் அடைந்த கரோனா நோய்க் கிருமி, 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெருவில் கண்டறியப்பட்டது. இந்த வகையான நோய்க் கிருமி 29 அமெரிக்க நாடுகளில் பரவியுள்ளது.
குறிப்பாக அர்ஜெண்டினா, சிலி போன்ற நாடுகளில் இந்த வகை பரவியுள்ளது. இந்த உருமாற்றம் அடைந்த நோய்க் கிருமியின் தாக்கம் கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளது.