தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளதால் மக்கள் அதிகப்படியான வெயில் காரணமாக அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்
கோடை காலத்திற்கு ஏற்றாற்போல் நாம் உணவு முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். உணவு வகைகளில் காரமான, புளிப்பான உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், கடைகளில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.
உடலின் உஷ்ணத்தை குறைக்க தண்ணீர், பழங்கள், இளநீர், மோர், பழச்சாறுகள் ஆகியவற்றை பருக வேண்டும். இதைப்போலவே நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதைகள் உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக் கூடியவை.
பாதாம் பிசின்