சமீபத்திய நடந்த ஆய்வு ஒன்றில் காலை உணவை குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடுவது நல்ல பலனை அளிப்பதாக தெரிவிக்கிறது. குழந்தைகளுக்கும் அது பாஸிடிவ் எனர்ஜியைத் தருகிறதாம்.
உங்கள் காலை உணவு சத்தானதா? - காலை உணவு
காலை உணவை அலட்சியப்படுத்துபவரா நீங்கள்? அனைத்து விதமான ஆய்வுகளும் சொல்கிற ஒரே முடிவு, ஒரு நாளைத் தொடங்குவதற்கு முன்பு கட்டாயம் காலையில் ஏதாவது சாப்பிட்டே ஆகவேண்டும் என்பதுதான்.
தங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்று எண்ணும் ஒவ்வொரு பெற்றோர்களும் இதையே விரும்புவார்கள். குழந்தைகளும், பெற்றோர்களும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும்போது பாசமும் நேசமும் அதிகரித்து ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கிறது. சமூக வளைதளங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாங்கள் அழகாகத் தெரிய மெனக்கெடுகிறார்கள். குடும்பம் சகிதமாக காலை உணவு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் .
காலை உணவு சாப்பிடுவது தொடர்பாக வாஷிங்டனில் நடந்த ஆய்வில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் 12,000க்கும் மேலான மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. இதில் மாணவர்களிடம் சாப்பிடும் பழக்கவழக்க முறை மாறியுள்ளதாகவும் தெரியவருகிறது. பாஸிட்டிவ் எனர்ஜி தந்து அந்த நாளை சுறுசுறுப்பாக உணர்வதாகவும் அந்த மாணவர்கள் தெரிவிக்கின்றனர் என்பது அந்த ஆய்வின் முடிவு.