தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

சுவையான வத்தல் குழம்பு சாதம் செய்வது எப்படி? - வத்தல் குழம்பு சாதம்

தமிழக உணவு வகைகளில் வத்தல் குழம்பு அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அதில் வத்தல் குழம்பு சாதம் செய்வது மிகவும் எளிமையானது. அதை செய்து முடித்து சுவைத்து பாருங்கள் அப்போது தெரியும் இதன் டேஸ்ட்.

samayal

By

Published : Feb 14, 2019, 11:38 AM IST

தேவையான பொருட்கள்:

  • வடித்த சாதம் - ஒரு கப்
  • புளி - எலுமிச்சை அளவு
  • சுண்டைக்காய் வற்றல் - 5
  • தோல் உரித்த சின்ன வெங்காயம் - 10
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • கடுகு - தேவையான அளவு
  • வெந்தயம் - தலா கால் டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
  • வத்தல் குழம்பு பொடி - 2 டீஸ்பூன்
  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

முதலில் புளியை நன்கு கரைத்து வடிகட்ட வேண்டும். பின்பு வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கிய பிறகு கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் சோ்த்துத் தாளிக்கவும்.

இதனுடன் சுண்டைக்காய் வற்றல், வெங்காயம், பூண்டு சோ்த்து நன்கு வதக்கவும். இவை நன்கு பொன்நிறமாக வதங்கியபிறகு புளிக்கரைசல், மஞ்சள்தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கிளறவும்.

பின்பு அவற்றுடன் வத்தல் குழம்பு பொடி சோ்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்தபிறகு குழம்பை இறக்கிவைக்க வேண்டும். இதனுடன் வடித்த சாதம் சோ்த்துக் கிளறினால் சுவையான வத்தல் குழம்பு சாதம் தயாராகிவிடும்.

ABOUT THE AUTHOR

...view details