தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

குறைந்த விலையில் சாம்சங்கின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்! - சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

Samsung
Samsung

By

Published : Apr 21, 2020, 5:02 PM IST

உலகில் சில நாடுகளில் மட்டுமே 5ஜி சேவை தற்போது வழங்கப்பட்டுவருகிறது. இருப்பினும் மற்ற நாடுகளில் குறிப்பாக இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் 5ஜி சேவை என்பது சோதனை அடிப்படையிலேயே உள்ளது. இருப்பினும் ஐகூ, ரியல்மி போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளன.

இருப்பினும் இது ஆரம்பக் காலத்தில் இருக்கும் தொழில்நுட்பம் என்பதால் 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், குறைந்த விலையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் 5ஜி வசதியைக் கொண்ட கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஆகிய மாடல்களை அமெரிக்காவில் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் கேலக்ஸி ஏ51 மாடல் 499.99 டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.38 ஆயிரம்) கேலக்ஸி ஏ71 மாடல் 599.99 டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.46 ஆயிரம்) விற்பனை செய்யப்படுகிறது.

எனவே தற்போது சாம்சங் நிறுவனம் வெளியிடத் திட்டமிட்டுள்ள ஸ்மார்ட்போனின் விலை இவற்றைவிடக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனை முதல் கட்டமாக 5ஜி சேவை வழங்கும் நாடுகளில் மட்டும் வெளியிட சாம்சங் திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆன்லைன் கல்வி: லேனோவாவின் புதிய முயற்சி

ABOUT THE AUTHOR

...view details