தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

வெளிவர தயாராகும் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ72 4ஜி! - latest mobiles

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதில் ஸ்நாப்டிராகன் 720ஜி சிப்செட் செயல்திறன் நிறுவப்பட்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Samsung Galaxy A72 4G
Samsung Galaxy A72 4G

By

Published : Dec 27, 2020, 7:42 PM IST

டெல்லி: கொரிய நிறுவனமான சாம்சங் தனது புதிய ஏ72 ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்த கைப்பேசி வெளிவரலாம் என தகவல்கள் கசிந்துள்ளன. 6.7” அங்குல முழுஅளவு எச்.டி தொடுதிரையுடன் வெளிவரும் இந்த கைப்பேசியில், ஸ்நாப்டிராகன் 720ஜி சிப்செட் பொருத்தப்பட்டு செயல்திறன் அளிக்கப்பட்டுள்ளது.

இது 4ஜிபி/6ஜிபி ரேம், 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க சேமிப்புத் திறன் கொண்டு வெளிவரும். படக்கருவிகளை பொறுத்தவரையில் பின்புறம் 64எம்பி முதன்மை சென்சார் உள்பட மொத்தம் நான்கு சென்சார்கள் உள்ளதாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பக்கம் 32எம்பி செல்பீ படக்கருவி பொருத்தப்பட்டுள்ளது. விரைவாக மின்னூட்டம் செய்ய 20 வாட் ஆதரவு டைப்-சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. மின்கல சேமிப்புத் திறன் 5000 எம்ஏஎச் ஆகவுள்ளது. இப்படியாக பல்வேறு அம்சங்களுடன் வெளிவரும் சாம்சங் ஏ72 குறித்த முழு தகவல், விலை ஆகியன குறித்து கைப்பேசி சந்தைப்படுத்தப்பட்ட பின் அறிந்துகொள்ளலாம்.

ABOUT THE AUTHOR

...view details