இந்தியாவின் முன்னணி மொபைல் நிறுவனமான சியோமி 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது எம்.ஐ. 3 என்ற மாடலுடன் இந்திய சந்தைக்கு அடியெடுத்து வைத்தது. தொடர்ந்து ரெட்மீ நோட், எம்.ஐ. உள்ளிட்ட மாடல்கள் அடுத்தடுத்து வெற்றிபெற்றதால் இந்திய மொபைல் சந்தையில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றது.
ரெட்மீ நிறுவனத்தின் புதிய மொபைல் ரூ.4.8 லட்சம்! - xiaomi
ரெட்மீ நிறுவனம் இன்று வெளியிடவுள்ள ரெட்மீ கே20 மொபைல்போனின் சிறப்புப் பதிப்பு ரூ.4.8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் சியோமி நிறுவனம் ரெட்மீ கே20, ரெட்மீ கே20 ப்ரோ என்ற இரு மாடல்களை இன்று வெளியிடவுள்ளது. இன் டிஸ்பிளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார், பாப் அப் கேமரா உள்ளிட்ட அசத்தலாக வெளியாகவுள்ள இந்த மாடலில் சிறப்புப் பதிப்பைப் பற்றி அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சியோமி நிறுவனத்தின் ஐந்தாவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் இந்தச் சிறப்புப் பதிப்பு குறைந்த அளவே உற்பத்தி செய்யப்படவுள்ளது. இந்த மொபைலின் பின்புறம் தங்கத்தால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.4.8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ள இந்த மொபைலைப் பற்றிய மற்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.