தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகவுள்ள ரியல்மி! - ரியல்மி 6 ப்ரோ

ரியல்மி நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போன் மாடல்களையும் ஃபிட்னெஸ் பேண்டையும் வெளியிட தயாராகிவருகிறது.

Realme 6 phone
Realme 6 phone

By

Published : Feb 29, 2020, 11:50 PM IST

சீனாவின் ரெட்மி நிறுவனத்திற்கு கடும் போட்டியாக உருவெடுத்துள்ளது ரியல்மி. ஓப்போவின் இணை நிறுவனமாக தொடங்கப்பட்ட ரியல்மி நிறுவனத்திற்கு வரவேற்பு கிடைத்ததையடுத்து, ரியல்மி விரைவிலேயே தனி நிறுவனமாக செயல்படத் தொடங்கியது.

தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குள் பல சாதனைகளை புரிந்துள்ள ரியல்மி நிறுவனம், தற்போது அடுத்தகட்ட பாய்சலுக்கு தயாராகியுள்ளது. அதன்படி ரியல்மி 6 (Realme 6) ரியல்மி 6 ப்ரோ (Realme 6 pro) ஆகிய ஸ்மார்ட்போன்களை ரியல்மி நிறுவனம் மார்ச் 5ஆம் தேதி வெளியிடவுள்ளது.

எதிர்பார்க்கபடும் வசதிகள்

  • 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா
  • முன்புறம் பின்புறம் என மொத்தம் ஆறு கேமராக்கள்
  • 30W அதிவேக பாஸ்ட் சார்ஜ் வசதி
  • பன்ச் ஹோல் டிஸ்ப்ளே

ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 12 ஆயிரம் முதல் 15 ஆயிரத்திற்குள் இருக்கும் என்றும், ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரத்திற்குள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ரியல்மி ஃபிட்னெஸ் பேண்டும் வரும் மார்ச் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. எம்ஐ ஸ்மார்ட் பேண்ட் 4க்கு இது கடும் போட்டியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த வெளியீட்டு நிகழ்வுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளதாக ரியல்மி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் ரியல்மியிடம் தோற்ற ரெட்மி

ABOUT THE AUTHOR

...view details