தமிழ்நாடு

tamil nadu

ஸ்னாப்டிராகனின் புதிய பிராசஸர் - முதலில் எந்த ஸ்மார்ட்போனில் வெளியாகும்?

By

Published : Dec 3, 2020, 1:10 PM IST

வாஷிங்டன்: அமெரிக்காவின் குவால்காம் நிறுவனம் புதிதாக ஸ்னாப்டிராகன் 888 என்ற பிராசஸரை வெளியிட்டுள்ளது.

Premium Offerings by Qualcomm
Premium Offerings by Qualcomm

அமெரிக்காவின் பிரபல டெக் நிறுவனமான குவால்காம், நேற்று நடைபெற்ற ஸ்னாப்டிராகன் டெக் மாநாட்டில் ஸ்னாப்டிராகன் 888 என்ற புதிய ப்ரீமியம் பிராசஸரை வெளியிட்டுள்ளது. இது முந்தைய தலைமுறை பிராசஸருடன் ஒப்பிடுகையில் சுமார் 35 விழுக்காடுவரை வேகமாக இருக்கும்.

கடந்தாண்டு வெளியிடப்பட்ட ஸ்னாப்டிராகன் 865 பிராசஸரைவிட குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களை ஸ்னாப்டிராகன் 888 SoC கொண்டிருக்கும். மேலும், இந்த பிராசஸர் ஆறாவது தலைமுறை குவால்காம் AI எஞ்சினுடன் வெளியாகியுள்ளது.

செயற்கை நுண்ணறிவை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் “முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட” குவால்காம் பிராசஸருடன் இந்த சிப் வெளியாகிறது.

குறிப்பாக, மொபைஸ் கேமர்களுக்கு ஏற்றவகையில் ஸ்னாப்டிராகன் 888 SoC மூன்றாம் தலைமுறை குவால்காம் ஸ்னாப்டிராகன் எலைட் கேமிங் மொபைல் எஞ்சினையும் கொண்டுள்ளது. இதன்மூலம் 144FPSஐ எளிதில் அடைய முடியும்.

மேலும், புகைப்படங்களை எடுப்பதிலும் புதிய ஸ்னாப்டிராகன் பிராசஸர் புதியதொரு அனுபவத்தை அளிக்கவுள்ளது. இது புகைப்படங்களையும் வீடியோக்களையும் வினாடிக்கு 2.7 ஜிகாபிக்சல்கள் வரை பதிவு செய்யும். அதாவது இது, நொடிக்கு 12 மெகாபிக்சல் திறன்கொண்ட 120 புகைப்படங்களை பதவு செய்யும் திறன் கொண்டது.

ஆசஸ், பிளாக் ஷார்க், எல்ஜி, லெனோவா, மோட்டோரோலா, நுபியா, ஒன்பிளஸ், ஒப்போ, ரியல்மி, விவோ, சியோமி என பல்வேறு நிறுவனங்களும் அடுத்தாண்டு தொடக்கத்திலேயே புதிய ஸ்னாப்டிராகன் பிராசஸருடன் ஸ்மார்ட்போன்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:சீனாவை மிஞ்சிய அமெரிக்கா - எதில்?

ABOUT THE AUTHOR

...view details