டெல்லி: பழமை விரும்பிகளின் ஆதர்ச பிரிய கைபேசியான நோக்கியா 5310இன் புதிய 2020 பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதிய நோக்கியா 5310 கைபேசி இந்தியச் சந்தையில் ரூ. 3,399 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய போன் அமேசான் மின்னணு வணிக தளத்திலும், நோக்கியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாகவும் விற்பனைக்குக் கிடைக்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடங்கியது அமேசான் ஃப்ரீடம் சேல் 2020!
நோக்கியா 5310 சிறப்பம்சங்கள்
- 2.4' இன்ச் QVGA திரை
- பிஸிக்கல் T9 கீ-போர்டு
- மீடியாடெக் எம்டி 6260 ஏ சிப்செட்
- 8 எம்பி ரேம் மற்றும் 16 எம்பி சேமிப்பு
- 32 ஜிபி வரை விரிவாக்க சேமிப்பு வசதி
- நோக்கியா சீரிஸ் 30+ இயங்குதளம்
- சிங்கிள் விஜிஏ படக்கருவி
- டூயல் டோன் சைடு கண்ட்ரோலர் பொத்தான்கள்
- வலது புறம் பாஸ் / பிளே, ஃபார்வேர்ட், பேக்வேர்ட், ஸ்கிப் பொத்தான்கள்
- இடது விளிம்பில் சவுண்ட் கூட்டவும், குறைப்பதற்குமான பொத்தான்கள்
- டூயல் 2ஜி இணைப்பு
- 3.5 மிமீ ஆடியோ ஜாக்
- எஃப்எம் ரேடியோ உள்ளீடு
- 1,200 mAh மின்கல சேமிப்பு