கூகுள் சார்பில் ஆண்டுதோறும் பிக்சல் ஸ்மார்ட்போன் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் கூகுள் பிக்சல் 4 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது. ஏகப்பட்ட புதிய வசதிகளை கொண்டிருந்தாலும், இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகவில்லை. இந்நிலையில், பிக்சல் நிறுவனம் தற்போது பிக்சல் 4ஏ என்ற புதிய ஸ்மார்ட்போனை தற்போது வெளியிட்டுள்ளது.
பிக்சல் 4 ஸ்மார்ட்போனைப் போல இல்லாமல், பிக்சல் 4ஏ வரும் அக்டோபரில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் என்றும் கூகுள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக்சல் 4ஏ சிறப்புகள்
- 5.81 இன்ச் OLED டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
- பின்புறம் 12 மெகாபிக்சல் கேமரா+2 மெகாபிக்சல் கேமரா
- 8 மெகாபிக்சல் முன்புற கேமரா
- 3,140mah பேட்டரி
- 18W ஃபாஸ்ட் சார்ஜ் வசதி
- பாதுகாப்பிற்கு கொரில்லா க்ளாஸ் 3
- ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்