இந்தியாவின் மிகப் பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, தனது ஸ்மார்ட்போன் வரிசையில் அடுத்த மடலாக ரெட்மி நோட் 9 ப்ரோ, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஆகிய ல்மார்ட்போன்களை மார்ச் 12ஆம் தேதி டெல்லியில் வெளியிட்டது. இந்த இரு ஸ்மார்ட்போன் மாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
குறிப்பாக, 12,999 ரூபாயில் தொடங்கும் ரெட்மி நோட் 9 ப்ரோவுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ரெட்மி நோட் 9 ப்ரோ இன்று மதியம் 12 மணிக்கு அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்தது. விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஸ்மார்ட்போன் 'Out of Stock' ஆனது.
இந்நிலையில், ரெட்மி நோட் 9 ப்ரோ வெறும் 90 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளதாக, ரெட்மி இந்தியா நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ரெட்மி நோட் 9 ப்ர அடுத்ததாக வரும் மார்ச் 24ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.