பிரபல கைப்பேசி நிறுவனமான விவோ, வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகப் புதிய ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வரிசையில், அடுத்த கண்டுபிடிப்பான விவோ Y73 ஸ்மார்ட்போனை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.இரண்டு நிறங்களில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விலையாக, ரூபாய் 20,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரெட்மி, ரியல்மி-க்கு போட்டியாக அறிமுகமான விவோ Y73 விவோ Y73 ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள்
- 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 11
- மீடியாடெக் ஹீலியோ ஜி 95 SoC பிராசஸர்
- 8ஜிபி ரேம்
- 128ஜிபி ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு வசதி (1TB வரை) விரிவாக்கம்
- 64எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள
- 16எம்பி செல்பி கேமரா
- 4000mah பேட்டரி
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி
- இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
எடை: 170 கிராம்
டயமண்ட் ஃப்ளேர் ,ரோமன் பிளாக் ஆகிய இரண்டு நிறங்களில் வரும் இந்த ஸ்மார்ட்போன், விவோ இந்தியா ஸ்டார்ஸ், அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.