தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

இந்தியாவில் அறிமுகமானது மோட்டோவின் முழு அளவு திரை 5ஜி மடக்கு கைபேசி!

மோட்டோரோலா நிறுவனத்தின் பழமையான கைபேசிகள் வரிசையில் பிரபலமானது மடக்கு ரக ரேசர் வகை கைபேசிகள். அதன் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பை “மோட்டோரோலா ரேசர் 5ஜி” எனும் பெயரில் ஒரு லட்சத்து 24ஆயிரத்து 999 ரூபாய்க்கு இந்தியாவில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மோட்டோரோலா ரேசர் 5ஜி, மோட்டோ ரேசர் 5ஜி, Motorola foldable Razr 5G, Moto foldable Razr 5G, Moto Razr 5G, Motorola Razr 5G, motorola razr 5g specs, motorola razr 5g feautres, motorola razr 5g price in india, moto razr 5g price in india, moto razr 5g specs, moto razr 5g feautres, மோட்டோரோலா ரேசர் 5ஜி சிறப்பம்சங்கள், மோட்டோ ரேசர் 5ஜி சிறப்பம்சங்கள், மோட்டோரோலா ரேசர் 5ஜி விலை, மோட்டோ ரேசர் 5ஜி விலை
மோட்டோரோலா ரேசர் 5ஜி

By

Published : Oct 7, 2020, 4:20 PM IST

Updated : Oct 7, 2020, 4:25 PM IST

டெல்லி: மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய முழுஅளவு திரை கொண்ட மடக்கு கைபேசியான ‘மோட்டோரோலா ரேசர் 5ஜி’ இந்தியாவில் அறிமுகமானது.

பிரத்யேக கிராஃபைட் நிறத்தில் வெளிவரும் இந்த ஸ்மார்ட் கைபேசி, அக்டோபர் 12ஆம் தேதி முதல் பயனர்களுக்காக ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விலை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 999 ரூபாய் (ரூ. 1,24,999) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ரேசர் 5ஜி

இந்த கைபேசி, 2 லட்சம் வரை மடக்கு விசையைத் தாங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மோட்டோரோலா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், விளையாட்டு, காணொலி என அனைத்து தரத்திலும் அசாத்திய திறனை வெளிப்படுத்தும் வண்ணம் இந்த கைபேசி வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

மோட்டோரோலாரேசர் 5ஜி கைபேசியின் சிறப்பம்சங்கள்:

  • 2142 x 876 தெளிவுடன், 6.2 அங்குல தொடுதிரை, 373 திரை அடர்த்தி
  • 2.7 அங்குல வெளிபக்க திரை
  • 48 மெகா பிக்சல் பின்பக்க படக்கருவி
  • 20 மெகா பிக்சல் முன்பக்க படக்கருவி
    மோட்டோரோலா ரேசர் 5ஜி
  • ஸ்நாப்டிராகன் 765ஜி சிப்செட்
  • 8ஜிபி ரேமுடன், 256 ஜிபி சேமிப்புத் திறன்
  • 2800mAh மின்கலத் திறன் (பேட்டரி)
  • ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் (2 வருட இயங்குதள புதுப்பித்தல் உத்தரவாதம் / 3 வருட பாதுகாப்பு புதுப்பித்தல் உத்தரவாதம்)
Last Updated : Oct 7, 2020, 4:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details