தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

'ஜஸ்ட் 5,499 தான்' இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்! - கேலக்ஸி M01 கோர் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் தனது அடுத்த முயற்சியாக பட்ஜெட் பயனர்களுக்காக சாம்சங் கேலக்ஸி M01 கோர் (Samsung Galaxy M01 core) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

சாம்சங்
சாம்சங்

By

Published : Jul 27, 2020, 8:59 PM IST

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி M01 கோர் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. கலக்கல் வசதிகளுடன் பட்ஜெட் பயனர்களை குறிவைத்தே இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சாம்சங் இந்தியாவின் மொபைல் வர்த்தக இயக்குனர் ஆதித்யா பப்பர் கூறுகையில், " கேலக்ஸி எம் 01 கோர் ஸ்மார்ட்போன் ‌சிறப்பான செயல்திறனுடயை குறைந்த விலை ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களை குறிவைத்தே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

கேலக்ஸி M1 கோர் சிறப்பு அம்சங்கள்:

  • 5.3 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்பிளே.
  • ஆக்டா கோர் மீடியா டெக் எம்டி 6739 சிப்செட்
  • 1 ஜிபி மற்றும் 2 ஜிபி ரேம்
  • 16 ஜிபி மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ்
  • 8 எம்பி பின்புற கேமரா
  • 5 எம்பி செல்பி கேமரா
  • கறுப்பு, நீலம், சிவப்பு என மூன்று நிறங்களில் அறிமுகம்
  • 3000 mah பேட்டரி

மேலும், மைக்ரோ எஸ்டி கார்ட் சப்போட்(512 ஜிபி வரை), யூஎஸ்பி போர்ட், வைஃபை, ப்ளூடூத் வெர்ஷன் 5 போன்ற பல வசதிகள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் 16ஜிபி மாடலின் விற்பனை விலை ரூ. 5,499 என்றும், 32 ஜிபி மாடலின் விற்பனை விலை ரூ. 6,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் வரும் ஜூலை 29ஆம் தேதி சாம்சங் ஸ்டோர்ஸ், ஆன்லனை தளங்களிலும் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details