கொரிய தகவல் சாதன தயாரிப்பு நிறுவனமான சாம்சங் தனது கைப்பேசி தொகுப்புகளில் புதிய சாம்சங் கேலக்ஸி எப் 22 ஸ்மார்ட்போனை இணைத்துள்ளது. நடுத்தரப் பயனர்களுக்காக குறைந்த விலையில் களமிறக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் கைபேசியில் சில பல அம்சங்கள் அதிரடியாக இருந்தாலும், மெயின் மேட்டரில் நிறுவனம் கோட்டை விட்டுள்ளது.
குறிப்பாக இந்த விலையில் சூப்பர் அமோலெட் தொடுதிரை, சிறப்பான பேட்டரி, 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் என கொடுத்துவிட்டு, மீடியாடெக் ஜி 80 எனும் பழைய 12 நேனோ மீட்டர் சிப்செட்டை பொருத்தியுள்ளது. இது பயனர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
எனினும், தரத்தில் எந்த சமரசமும் செய்யாமல், அம்சங்களை அள்ளிக்கொடுத்திருக்கும் சாம்சங் கேலக்ஸி எப் 22 இந்திய சந்தையில் 64 ஜிபி சேமிப்பு திறன் + 4 ஜிபி ரேம் பதிப்பு ரூ.12,499க்கும், 128 ஜிபி சேமிப்பு திறன் + 6 ஜிபி ரேம் ரூ. 14,999க்கும் பிளிப்கார்ட், சாம்சங் ஆகிய தளங்கள் மூலம் விற்கப்படுகிறது.
டிரெண்டிங் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்:கேலக்ஸி எஃப் 62 | கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா | கேலக்ஸி எம்31எஸ்
சாம்சங் கேலக்ஸி எப் 22 சிறப்பம்சங்கள்
- 6.4 அங்குல எச்டி+ சூப்பர் அமோலெட் (720x1600 பிக்சல்) தொடுதிரை + 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் + 274 திரை அடர்த்தி
- ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன் யூஐ கோர் 3.1
- மீடியாடெக் ஹீலியோ ஜி 80 (2020) 12 நானோ மீட்டர் சிப்செட் உடன், ஆக்டாகோர் 2 ஜிகா ஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ75, 1.8 ஜிகா ஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ55 ஆகியவை சேர்ந்து மாலி ஜி52 எம்சி2 ஜிபியு உடன் இயங்குகிறது
- 64ஜிபி சேமிப்பு திறன் + 4ஜிபி ரேம், 128ஜிபி சேமிப்பு திறன் + 6ஜிபி ரேம் ஆகிய இரண்டு விருப்பத் தேர்வுகள்
- பின்பக்கம் 48 மெகாபிக்சல், எப்/1.8, (வைட்) + 8 மெகாபிக்சல், எப்/2.2, 123˚ (அல்ட்ரா வைட்) + 2 மெகாபிக்சல், எப்/2.4 மேக்ரோ + 2 மெகாபிக்சல், எப்/2.4 டெப்த் சென்சார்களுடன் கேமரா
- முன்பக்கம் 13 மெகாபிக்சல் எப்/2.2 வைட் ஆங்கிள் செல்ஃபி கேமரா
- 6000 எம்ஏஎச் லித்தியம் பாலிமர் பேட்டரி + 15 வாட் விரைவாக மின்னூட்டும் திறன்
- யூஎஸ்பி டைப்-சி, 4ஜி இரட்டை சிம் + ஒரு எஸ்டி கார்ட் ஆதரவு, புளூடூத் 5.0
- 3.5mm ஹெட்ஃபோன் ஜாக்
- சாம்சங் பே மினி
- அளவு (மில்லி மீட்டர்): 160 x 74 x 9.4
- எடை: 203 கிராம்
- நிறங்கள்: டெனிம் நீலம், டெனிம் கறுப்பு
சாம்சங் கேலக்ஸி எப் 22 தோற்றம்