டெல்லி: லண்டன் நிறுவனமான ’நத்திங்’ தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பாட்ஸ் ‘இயர் 1’ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்னாள் ஒன் பிளஸ் நிறுவன இயக்குநரும், அதன் இணை நிறுவனருமான பீட் லாவ் என்பவர் தான், இந்தப் புதிய தகவல் தொழில்நுட்ப சாதன தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
2020ஆம் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் முதலில் நிதி திரட்டும் வேலையில் முனைப்புக் காட்டியது. அதன்மூலம் பல முதலீட்டாளர்களிடத்தில் இருந்து ஏழு மில்லியன் டாலர்கள் வரை திரட்ட முடிந்தது.
பணத்தைத் திரட்டிய கையோடு புதிய தகவல் சாதன தயாரிப்பில் ’நத்திங்’ இறங்கியது. தொடர்ந்து, புதிய இயர்பாட்ஸ் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டது. நத்திங் நிறுவனத்தின் ‘இயர் 1’ இயர்பாட்ஸ் நியூட் டிசைன் கொண்டதாக இருக்கலாம் என்று நிறுவனம் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் அறியமுடிகிறது.
ட்விட்டர் திரெட்ஸ் போல ஃபேஸ்புக் பயனர்களுக்கு புதிய அம்சம்!
இந்தியாவில்,ஜூலை 27ஆம் விற்பனைக்கு வரும் இந்த ‘இயர் 1’ இயர்பாட்ஸை, பயனாளிகள் ஃபிளிப்கார்ட் மூலம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
விலை விவரம் குறித்து, எந்த தகவலையும் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.