டிசி ஃபேண்டம் எனும் ரசிகர்கள் நிகழ்வில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், தனது பேட்மேன் விளையாட்டுத்தொகுப்புகளின் வரிசையில் ‘கோதம் நைட்ஸ்’ என்ற விளையாட்டை வெளியிட்டுள்ளது.
நேற்று பேட்மேன் டீசர் ட்ரெய்லர், இன்று கேம் - வார்னர் பிரதர்ஸ் அதிரடி! - கேம்
வாஷ்ங்டன் : வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தனது ’பேட்மேன்’ விளையாட்டுத் தொகுப்புகளின் வரிசையில் ‘கோதம் நைட்ஸ்’ என்ற புதிய விளையாட்டை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Gotham Knights
இந்த விளையாட்டு தொடர்பான சுமார் எட்டு நிமிடக் காணொலியை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் பேட் கேர்ள், ராபின் ஆகியோர் இலக்கை அடைய முன்னேறிச் செல்லும் விதமாக காணொலி விறுவிறுப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஹீரோ விளையாட்டுகளின்வரிசையில், கோதம் நைட்ஸ் முக்கிய இடம் பிடிக்கும் எனவும் அந்நிறுவனம் மார்தட்டிக் கொண்டுள்ளது.