கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் ஸ்மார்ட்போன் பயன்பாடு 30 முதல் 60 விழுக்காடுவரை அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் உலக அளவில் விளையாடப்படும் முக்கிய வீடியோ கேம்களில் ஒன்றாக ஃபோர்ட்நைட் உருவெடுத்துள்ளது.
ஸ்மார்ட்போன்களில் பப்ஜி மற்றும் கால் ஆஃப் ட்யூட்டி ஆகிய கேம்கள்தான் அதிகம் விளையாடப்படும் கேம்களாக இருந்தன. அந்த சூழ்நிலையில்தான் ஃபோர்ட்நைட் ஸ்மார்ட்போன்களில் வெளியிடப்பட்டது. பப்ஜி மற்றும் கால் ஆஃப் ட்யூட்டி ஆகிய கேம்களுக்கு இருந்த வரவேற்பால் ஃபோர்ட்நைட் தனது சந்தையை விரிவுபடுத்துவது கடினம் என்றே பலரும் கருதினர்.
இருப்பினும் அட்டகாசமான கிராஃபிக்ஸ், எளிமையான விளையாட்டு முறை ஆகியவற்றை கொண்டிருப்பதால் ஃபோர்ட்நைட்டுக்கு வீடியோ கேம் பிரியர்கள் மத்தியில் ஆதரவு பெருகிவந்தது.