தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

விளம்பரதாரர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய அம்சம் யூ-டியூப் செலக்ட்

காணொலி பகிரும் தளமான யூ-டியூப், உலகளவில் உள்ள தனது விளம்பரதாரர்களுக்கு எளிதில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து விளம்பரங்களை வழங்கும் நோக்கில் ‘யூ-டியூப் செலெக்ட்’ எனும் புதிய அம்சத்தை புகுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களும் தேவையற்ற விளம்பரங்களை தவிர்த்து, தேவையானதை கண்டு பயனடைய முடியும்.

YouTube Select
YouTube Select

By

Published : May 20, 2020, 4:54 PM IST

சான் பிராசிஸ்கோ: யூ-டியூப் செலெக்ட் எனும் புதிய அம்சத்தை விளம்பரதாரர்களுக்காக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சரியான விளம்பரங்களை அளிக்க முடியும். மேலும், வாடிக்கையாளர், பார்வையாளர்கள் முகம் சுழிக்காத வகையிலும், அவர்களுக்கு பயன்படும் வகையிலும் விளம்பரங்களை விளம்பரதாரர்கள் தேர்வு செய்து வெளியிட இது உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தொழில்நுட்பம், விளையாட்டு, பொழுபோக்கு என அனைத்து வகைப்படுத்தப்பட்ட பிரிவுகளும் இருப்பதால், விளம்பரதாரர்கள் எளிதில் இதனை கையாள முடியும் என யூ-டியூப் தரப்பில் கூறப்படுகிறது.

ஆப்பிள் ஐஓஎஸ் 14 இயங்குதளத்தின் ஆகுமெண்டட் ரியாலிட்டி செயலி குறித்த தகவல் கசிவு!

இந்த அம்சமானது யூ-டியூபின் பிரத்யேக கிளை தளங்களான யூ-டியூப் கிட்ஸ், ஸ்போர்ட்ஸ், மியூசிக், ஒரிஜினல்ஸ் என அனைத்திற்கும் பொருந்தும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details