தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

நெட்பிளிக்ஸை காலி செய்ய யூடியூப் எடுத்துள்ள அதிரடி முடிவு! - யூடியூப் ஒரிஜினல்ஸ்

ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கியிருக்கும் மக்களைக் கவரும் வகையில் யூடியூப் நிறுவனம் தனது 11 பிரத்யேக தொடர்களை இலவசமாக வெளியிட்டுள்ளது.

YouTube
YouTube

By

Published : Apr 24, 2020, 10:07 AM IST

கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் முழு ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்களின் இணையப்பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. ஆன்லைனில் வீடியோ பார்க்கும் பழக்கமும் மக்களிடையே அதிகரித்துள்ளது. குறிப்பாக நெட்பிளிக்ஸ், யூடியூப் ஆகிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் பொதுமக்கள் அதிகளவில் வீடியோக்களைக் கண்டு ரசிக்கின்றனர்.

அதில் நெட்பிளிக்ஸ் தளத்தில் மாதம் குறைந்தபட்சம் ரூ.200 செலுத்தினால் மட்டுமே எந்த வீடியோவானாலும் பார்க்க முடியும். ஆனால் யூடியூப்-இன் பெரும்பாலான வீடியோக்களை இலவசமாகவே பார்க்கலாம். இருப்பினும் யூடியூப்பும் சில பிரத்யேக தொடர்கள், நிகழ்ச்சிகளை் (யூடியூப் ஒரிஜினல்ஸ்) சந்தா அடிப்படையில் வழங்கிவருகிறது.

இந்நிலையில், யூடியூப்பால் தயாரிக்கப்பட்ட 11 பிரத்யேக நிகழ்ச்சிகளை (YouTube Originals) பொதுமக்கள் இலவசமாகக் கண்டு மகிழலாம் என்று யூடியூப் அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சூசன் வோஜ்சிக்கி கூறுகையில்,"நாம் வீட்டில் அதிக நேரம் செலவழித்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் 11 YouTube Originals நிகழ்ச்சிகளை இலவசமாக வழங்க முடிவெடுத்துள்ளோம்.

சில நிகழ்ச்சிகள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவும், சில நிகழ்ச்சிகள் உங்களைச் சிரிக்க வைக்கும். அனைவருக்கும் தேவையான ஏதேனும் ஒன்று இந்த நிகழ்ச்சிகளில் இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, வீட்டிலிருந்து மாணவர்கள் கல்வி கற்க உதவியாக உலகம், சூரியக் குடும்பம் உள்ளிட்டவை குறித்த தொடர்களையும், ஆவணப் படங்களையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் யூடியூப் தளத்தில் இலவசமாக வெளியிட்டது.

இதையும் படிங்க: உங்கள் இருப்பிடத்தை இனி மறைக்க இயலாது! - ஃபேஸ்புக்

ABOUT THE AUTHOR

...view details