ஊரடங்கினால் வீட்டிலேயே நேரத்தைக் கழிக்கும் மக்களுக்காக சமூக வலைதள செயலிகள் புதிய வசதிகளையும், அம்சங்களையும் பயனர்களுக்காக அறிமுகம் செய்துவருகின்றன. அந்த வகையில், வாட்ஸ் அப் செயலியில், ‘வீட்டிலேயே இணைந்திருப்போம்’ என்பதை வலியுறுத்தும் விதமாக புதிய ஸ்டிக்கர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கரோனா நோய்க் கிருமித் தொற்றின் நெருக்கடி காலத்தில் மக்களின் உணர்ச்சிகள் என்ன, எதிர்வினைகள் என்ன என்பதைச் சொல்லும் வண்ணம் புதிய ஸ்டிக்கர்களின் தொகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனை உலக சுகாதார மையத்துடன் இணைந்து வாட்ஸ் அப் உருவாக்கியுள்ளது. இந்த ஸ்டிக்கர்கள் இந்தி, அராபியம், ஜெர்மன், பிரெஞ்ச், இத்தாலி உள்ளிட்ட 10 மொழிகளில் கிடைக்கும்.