பொதுவாக மொபைல் பயன்படுத்துவோர் மற்றவர்களிடம் மொபைலைத் தரத் தயக்கம் காட்டுவார்கள். அதற்கு முக்கிய காரணமே, வாட்ஸ்அப், மெசென்ஜர் போன்ற சாட்டிங் தளங்களில் நமது சாட்டிங்கை பிறர் பார்த்துவிடுவார்களோ என்ற பயத்தில்தான்.
இந்நிலையில், ஆண்டராய்டு மொபைல்களுக்கு சமீபத்தில் வெளியான வாட்ஸ்அப் அப்டேட் மிக முக்கிய வசதியை வழங்கியுள்ளது. அதன்படி இனிமேல் வாட்ஸ்அப் செயலியைப் பயனாளர் கைரேகையின்றி வேறுயாராலும் திறக்கமுடியாது. இந்த புது பிங்கர்பிரின்ட் சென்சார் வசதி முன்னரே சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தாலும் இப்போதுதான் அனைத்து பயனாளர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.