அமெரிக்காவின் பெர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் புதிய செயலி ஒன்றை வடிவமைத்துள்ளனர். இந்தச் செயலியை ரோபோவுடன் இணைத்தால், ரோபோ செய்ய வேண்டியவற்றை இந்த மொபைல் செயலி மூலமாகவே செய்யவைக்கலாம். அதாவது நம் ரோபோ குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால், மொபைல் போனில் ஆகுமெண்டட் ரியாலிட்டி உதவியுடன் இந்த செயலியில் அங்கு செல்ல வேண்டும் என்று வரைந்தால் ரோபோ தானாக அங்குச் செல்லும்.
ரோபோ துறையில் புரட்சி! அபரிமித வளர்ச்சியில் தொழில்நுட்பம்! - mobile app
வாஷிங்டன்: மொபைல்போனைக் கொண்டே ரோபோவைக் கட்டுப்படுத்தக் கூடிய புதிய செயலி ஒன்றை பல்கலைக்கழக மணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இனி போனை ரோபோவாக்கலாம்....
இதன்மூலம் ரோபோக்களை உருவாக்கும்போது அதிக செலவை எடுத்துக் கொள்ளும் கணினி புரோகிராம்களை எழுதும் செலவு பெருமளவு குறையும். இந்தச் செயலி ரோபோவுக்கு தேவையான கணினி புரோகிராம்களை தானாகவே எழுதிக்கொள்ளும். இதுமட்டுமில்லாமல் ரோபோக்கள் திரும்பத் திரும்ப செய்ய வேண்டிய செயல்கள், குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை செய்யவேண்டிய செயல்கள் என பலவற்றையும் செயலி மூலமே புரோகிராம் செய்யலாம்.
இது ரோபோ துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.