தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

சாம்சங் டிவியில் வருகிறது ஆப்பிள் மியூசிக்! - tamil tech news

தென் கொரியாவின் பிரதான நிறுவனமும், உலகளவில் மிகப்பெரிய தொலைக்காட்சி உற்பத்தியாளருமான சாம்சங் நிறுவனம், தங்களின் ஸ்மார்ட் தொலைகாட்சிப் பெட்டிகளில் ஆப்பிள் மியூசிக் செயலி இடம்பெறும் எனக் கூறியுள்ளது.

Samsung Brings apple music in its smart tvs
Samsung Brings apple music in its smart tvs

By

Published : Apr 27, 2020, 10:27 AM IST

Updated : Apr 27, 2020, 12:12 PM IST

2018ஆம் ஆண்டு முதல் வெளியான தொலைக்காட்சி ரகங்களில் இந்த சேவை கிடைக்கும் என்று நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம்தான் தங்கள் ஸ்மார்ட் தொலைக்காட்சியில் ஆப்பிள் டிவி செயலியை சென்ற வருடம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஜூம் செயலியை ஓரம்கட்டும் சமூகவலைதள அரசன்!

சாம்சங் ஸ்மார்ட் டிவி பயனர்கள், சாம்சங் ஆப் ஸ்டோரிலிருந்து, ஆப்பிள் மியூசிக் செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம். ஏற்கனவே பயனர்கள் வைத்திருக்கும் ஆப்பிள் கணக்கைக் கொண்டு செயலியில் உள்நுழையலாம் அல்லது புதிதாக சந்தாவைச் செலுத்தி தங்கள் டிவியில் இருந்தே தொடங்கலாம் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

Last Updated : Apr 27, 2020, 12:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details