கடந்த சில ஆண்டுகளில், ஸ்மார்ட்வாட்ச் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆதலால், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பும் ஸ்மார்ட் வாட்ச் தகவல் சாதனங்கள் தயாரிப்பில் நிறுவனங்கள் போட்டிப்போட்டு ஈடுபடுகின்றன.
இதன்மூலம் விளையாட்டு, சுகாதாரம், தகவல் தொடர்பு என அனைத்தினையும் பயனர்கள் பெற முடியும். இதற்கு முக்கிய ஊக்கியாக இருப்பது ஸ்மார்ச் வாட்ச்சில் இருக்கும் இயங்குதளம்.
தற்போது, ஸ்னாப்டிராகன் 4100 மற்றும் ஸ்னாப்டிராகன் 4100+ என்று இரு ரகங்களாக வெளிவருகிறது. இதில் உள்ள முக்கிய அம்சங்கள்:
- அதி-குறைந்த கலப்பின அணுகுமுறை
- அதிவேக சிஸ்டம்-ஆன்-சிப் (SoC)
- ஒரு சிறந்த, எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும் (AON) இணை செயலி
- 12nm செயல்முறை தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட சக்தி
முன்னதாக சுண்டோ 7 ஸ்மார்ட் வாட்ச்களில் கூகுள் வியர் இயங்குதளத்திற்கு உயிரூட்டியது ஸ்னாப்டிராகன் வியர் 3100 வன்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் இதே நிறுவனத்துடன் இணைந்து தான் மேம்பட்ட ஸ்மார்ட் வாட்ச் வன்பொட்களை உருவாக்க குவால்காம் முயன்று வருகிறது.