உலகம் முழுவதும் இணையவழித் தகவல் பரிமாற்றச் செயலியாக வாட்ஸ்அப் செயலி 200 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்களால் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் உபயோகப்படுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியின் சமீபத்தில் அப்டேட்டில் கொண்டுவந்துள்ள தனிநபர் கொள்கை மாற்றத்தால், நமது தரவுகள் பேஸ்புக்குடன் இணைந்துவிடும் என்ற செய்தி பரவிவந்தது. புதிய கொள்கை மாற்றத்தை டெஸ்லா தலைமை நிர்வாக அலுவலர் எலான் மஸ்க் உள்பட பலர் விமர்சித்தனர். இந்தத் தகவலால் அச்சமடைந்த பெரும்பாலானோர் வாட்ஸ்அப் செயலிக்கு குட்பை சொல்லிவிட்டு சிக்னல், டெலிகிராம் பக்கம் திரும்பினர்.
'உங்கள் தனிப்பட்ட தகவலை யாரும் பார்க்க முடியாது' - வாட்ஸ்அப் விளக்கம் - டெஸ்லா தலைமை நிர்வாக அலுவலர் எலான் மஸ்க்
பயனாளர்களின் தனிப்பட்ட தகவலை நாங்கள் ஒருபோதும் கண்காணிக்க மாட்டோம் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப்
இந்நிலையில், பயனாளர்ளின் தனிப்பட்ட தகவல் ஒரு போதும் கண்காணிக்கப்படாது என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு, குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதன்படி,
- உங்களின் தனிப்பட்ட குறுஞ்செய்திகள் அல்லது நண்பர்களுடனான தொலைபேசி அழைப்புகள் நிச்சயம் கண்காணிக்கப்படாது.
- உங்களின் தனிப்பட்ட விவரங்கள் அல்லது இருப்பிடம் குறித்த தகவல், பேஸ்புக் செயலிக்கு பரிமாற்றம் செய்யப்படாது. குரூப் தகவல்களும் பாதுகாப்பானதாக இருக்கும்.
- வாட்ஸ்அப் மூலமாக உங்களின் நண்பர்களுக்கு நீங்கள் ஷேர் செய்யும் முகவரி, உங்கள் இருவரால் மட்டுமே பார்க்க முடியும். அதை, வேறு யாரும் பார்த்திட முடியாது.
- உங்களின் செல்ஃபோன் கான்டாக்டில் உள்ள நம்பரை, பேஸ்புக்கில் இணைக்க கட்டாயப்படுத்த மாட்டோம்.
- உங்களது தகவல்களை நாங்கள் விளம்பர நோக்கத்திற்காக ஃபேஸ்புக்கிற்கு கொடுக்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக வைரலாக பரவிக்கொண்டிருந்த குழப்பத்திற்கு, வாட்ஸ்அப் நிறுவனம் பதிலளித்துள்ளது. பயனாளர்கள் விருப்பம் தெரிவித்தால் மட்டுமே, விளம்பர ரீதியான தகவல்கள் பயனாளர்களுக்கு சென்றடையும் எனக் கூறப்படுகிறது.