தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

’இது வாட்ஸ்அப் UPI’ : புதிய பணப்பறிமாற்ற செயலி இந்தியாவில் அறிமுகம்! - வாட்ஸ்அப் பணம் அனுப்பும் வசதி இந்தியாவில் அறிமுகம்

வாட்ஸ்அப் செயலியில் UPI மூலம் பணம் அனுப்பும் வசதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

By

Published : Nov 6, 2020, 2:37 PM IST

உலக அளவில் பிரபலமான வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில், தற்போது UPI மூலம் பணம் அனுப்பும் வசதியை இந்தியாவில் வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வாட்ஸ்அப் நிறுவனம் இதற்கான சோதனைகளை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது NPCI (National Payments Corporation of India) இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. 10 பிராந்திய மொழி வாட்ஸ்அப் அப்டேட்டுகளில் முதற்கட்டமாக இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

UPI மூலம் பணம் அனுப்பும் வசதி

இது தொடர்பாக பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் கூறுகையில், ”மெசேஜ் மூலமாகவே இனி உங்கள் நண்பர்களுக்கு வாட்ஸ்அப் வழியாக எளிதில் பணம் அனுப்ப முடியும். இதற்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது.

140 வங்கிகள் மூலம் இந்த சேவை வழங்கப்படுகிறது. இது பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது என்பதை உறுதிப்படுத்த எல்லாவற்றையும் மேற்பார்வையிடும் National Payments Corporation of Indiaஉடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். ’கூகுள் பே’ உள்ளிட்ட மற்ற செயலிகள் போலவே இதுவும் செயல்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

UPI மூலம் பணம் அனுப்பும் வசதி

முன்னதாக, வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் மெசேஜ்கள் ஏழு நாள்களில் காணாமல்போகும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details