சான் பிரான்சிஸ்கோ:கூகுள் தனது குரோம் இயங்குதளத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்த நெவர் ஷேர் எனும் நிறுவனத்தைக் கையகப்படுத்தியுள்ளது.
நெவர்வேர் நிறுவனத்தினைக் கையகப்படுத்திய கூகுள்!
சாதாரண கணினிகளை கூகுள் நிறுவனத்தின் இயங்குதளங்களின் திறன்கொண்டு இயங்கும் கணினிகளாக மாற்ற நெவர்ஷேர் நிறுவனத்தின் கிளவுட்ரெடியால் முடியும். எனவே அதன் சேவையை உட்படுத்திக்கொள்ள, நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
Google on neverware
நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு விளங்குகிறது நெவர்ஷேர். அதன் பிரதான தளமான கிளவுட்ரெடியைக் கொண்டு, கூகுள் குரோம் இயங்குதளத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த முடியும் என்று கூகுள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
புதிய பதிப்புகளை நிறுவுவதற்கு இந்த நிறுவனத்தின் கிளவுட்ரெடி பேருதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்த விரிவான தகவல்களை இரு நிறுவனங்களும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.