உலகின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்பிளிக்ஸ் 1997ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் சந்தையைப் பிடித்தாலும் இந்தோனேசியா, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சந்தையைப் பிடிக்கமுடியவில்லை. அதற்கு காரணம், மற்ற ஸ்ட்ரீமிங் தளங்களைவிட நெட்பிளிக்ஸில் விலை கூடுதல்.
இந்திய பயனாளர்களை கவர நெட்பிளிக்ஸ்ஸின் அடுத்த அதிரடி! - மொபைல் ஒன்லி
இந்தியாவில் தனது இருப்பை அதிகரிக்க புதிய 'மொபைல் ஒன்லி' திட்டத்தை நெட்பிளிக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில், நெட்பிளிக்ஸின் ஆரம்ப விலை மாதத்திற்கு ரூ.499; இது அமோசான்(ரூ.129), ஹாட்ஸ்டார்(ரூ.299) ஆகியவற்றைவிட மிக அதிகம். இதைக் கருத்தில் கொண்டு வளரும் நாடுகளில் தனது சந்தையை அதிகரிக்க 'மொபைல் ஒன்லி' திட்டத்தை கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் நெட்பிளிக்ஸ் அறிமுகப்படுத்தியது. இது அந்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து இந்தியாவிலும் சோதனை அடிப்படையில் சில மாதங்களாக இருந்த இந்த 'மொபைல் ஒன்லி' திட்டம் இன்று அதிகார்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டதில் ரூ. 199க்கு நெட்பிளிக்ஸின் அனைத்து வீடியோக்களையும் எஸ்.டி(Standard Definition) தரத்தில் பார்க்கமுடியும். உலகில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் மொபைல்போன் மூலம் நெட்பிளிக்ஸை பார்ப்பவர்கள் அதிகம். எனவே இப்புதிய திட்டத்தின் மூலம் நெட்பிளிக்ஸின் இந்தியச் சந்தை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.