தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும் சீன செயலிகள்: எம்.ஐ ப்ரவுசர், பெய்டூ உடன் 47 செயலிகளுக்கு தடை! - 47 சீன செயலிகள்

கல்வான் பள்ளத்தாக்கில் சீன படையுடன் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு வீர மரணமடைந்தனர். இச்சூழலில் பயனர்கள் தனியுரிமை பாதுகாப்புக் கருதி 59 சீன செயலிகளை அரசு தடைசெய்தது. தொடர்ந்து எம்.ஐ. ப்ரவுசர், பெய்டூ ஆகியவற்றுடன் 47 சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

Chinese apps banned by India
Chinese apps banned by India

By

Published : Aug 6, 2020, 4:23 PM IST

டெல்லி: சீனாவின் புகழ்பெற்ற கைபேசி தயாரிப்பு நிறுவனமான சியோமியின் எம்.ஐ ப்ரவுசர், மெய்டூ நிறுவனத்தின் மெய்பெய் ஆகிய செயலிகள் இந்திய அரசின் இரண்டாம் கட்ட சீன செயலிகள் தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இரண்டாம் கட்ட தடை பட்டியலில் பிரபலமான ஹீரோஸ் வார், ஏர் பிரஷ், போஸ்காம், கேப்கட், பெய்டூ உலாவி, எம்.ஐ ப்ரவுசர் போன்ற சீன செயலிகள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட சீன செயலிகள்: பப்ஜி உள்பட மேலும் 47 செயலிகளுக்கு தடையா?

இதுமட்டுமில்லாமல், 250க்கும் மேற்பட்ட சீன செயலிகள் பயனர்களின் தனியுரிமை தகவல்களை திருடுகிறதா என்று மத்திய அரசு கண்காணித்துவருகிறது.

தடை செய்யப்பட்ட சீன செயலிகள்

ABOUT THE AUTHOR

...view details