டெல்லி: காலநிலை அறிக்கை குறித்து அறிந்துகொள்ள உமாங் செயலியில் இந்திய வானிலை ஆய்வு மையம் இணைந்துள்ளது.
இதன்மூலம் புயல், சுற்றுலா முன்னறிவிப்பு, எச்சரிக்கைகள் போன்ற பல்வேறு தகவல்கள் இச்செயலியில் இணைக்கப்பட்டுள்ளது. இதில் தற்போதைய வானிலை, நகர வானிலை முன்னறிவிப்பு, மழை குறித்த தகவல்கள், சுற்றுலா முன்னறிவிப்பு, எச்சரிக்கைகள், புயல் குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும்.
உலகளாவிய சைபர் ஸ்பேஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உமாங் எனும் செயலியை அறிமுகம் செய்தார். புதிய தலைமுறை ஆட்சிக்கான ஒருங்கிணைந்த மொபைல் செயலியை உமாங் (UMANG) என்ற பெயரில் இந்த செயலி வெளியிடப்பட்டது.
இதன்மூலம் நாட்டு மக்கள் அனைவரும் அரசு சேவைகளை ஒரே தளத்தில் மிக எளிமையாக பயன்படுத்த முடியும். ஆதார், டிஜிலாக்கர், ரேபிட் அக்செஸ்மென்ட் சிஸ்டம் மற்றும் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் உள்ளிட்ட சேவைகள் இதில் அடங்கும்.
மேலும் இந்த செயலியின் மூலம் 43 அரசு துறைகளில் 150க்கும் அதிகமான சேவைகள் மற்றும் 200க்கும் அதிகமான துறைகளை இயக்கும் வசதியும், 1200க்கும் அதிகமான சேவைகளும் உள்ளன.