தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

சென்சாருக்குள் வருகிறதா ஹாட்ஸ்டார், நெட்பிலிக்ஸ்? - censor to Hotstar

ஹாட்ஸ்டார், நெட்பிலிக்ஸ் போன்ற வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களின் வீடியோக்களை சென்சார் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுவருவதாக ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Prakash Javadekar latest Press Meet

By

Published : Oct 3, 2019, 11:50 PM IST

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "ஊடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் இருப்பது போல வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களுக்கும் ஒருவித கட்டுப்பாடு இருக்க வேண்டும். ஆனால் இது அவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் இருக்காது.

இந்த வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாததால், பல நிறுவனங்களும் போட்டிப்போடச் சமமான வாய்ப்புகள் இருப்பதில்லை என்று பல முக்கிய ஊடகங்கள் அரசாங்கத்திற்குப் புகாரளித்துள்ளதாகவும் கூறினார்.

"அனைத்துவிதமான திரைப்படங்களும் ஸ்ட்ரீமிங் தளங்களில் உள்ளதால், இதை எப்படிக் கையாளவேண்டும் என்ற ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு, செய்தி சேனல்களுக்கும் திரைப்படங்களுக்கும் உள்ளது போல கட்டபாடு விதிக்கும் எந்த அமைப்பும் இதுவரை இல்லை" என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் இதுவரை அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே: மாட்டுச் சாணத்தில் தயாரித்த சோப்பை வெளியிட்ட நிதின் கட்கரி!

ABOUT THE AUTHOR

...view details