கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் பொதுமக்களின் இணைய பயன்பாடு பெருமளவு அதிகரித்துள்ளது.
இதனால் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல செயலிகளும் புதுப்புது அப்டேட்டுகளை வழங்கிவருகின்றன. இந்நிலையில், தற்போது பிரபல வீடியோ சாட்டிங் செயலியான கூகுள் டியோ, தனது குரூப் வீடியோ கால் வசதியின் மூலம் இப்போது ஒரே நேரத்தில் 12 பேர் வரை வீடியோ காலில் இணையலாம் என்று அறிவித்துள்ளது.
இது குறித்து கூகுளின் தயாரிப்பு மேலாண்மை பிரிவின் மூத்த இயக்குநர் சனாஸ் அஹரி லெமெல்சன் தனது ட்விட்டர் பக்கதில், "உலகெங்கும் உள்ள பயனாளர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை தொடர்புகொள்ள டியோ உதவுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி.