டெல்லி: தேடுபொறி (search engine) ஜாம்பவானான கூகுள், தனது குரோம் உலாவியில் டேப்களை ஒழுங்குபடுத்தும் புது அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
குரோம் உலாவியில் கூகுள் கொண்டுவரவிருக்கும் புதிய அம்சம்! - latest tech news
கூகுள் குரோம் உலாவியில், பயனர்கள் எளிதில் தங்களின் டேப்களை நினைவில் வைத்துக்கொள்ளவும், அதனை ஒழுங்குப்படுத்தி குழுவாக அமைத்து பணி மேற்கொள்ளவும் புதிய பதிப்பை உருவாக்கியுள்ளது கூகுள். பயனர்களுக்கு பீட்டா பதிப்பின் மூலம் தற்போது இந்த அம்சத்தை சோதனை செய்துவருகிறது கூகுள்.
google chrome
இந்த வசதியை உடனே பெற இதன் பயனர்கள், கூகுள் குரோம் உலாவியின் பீட்டா பதிப்பில் முதலில் இணைய வேண்டும். இணைந்த பின் அதில் வரும் புதிய பதிப்பைத் தரவிறக்கம் செய்து நிறுவ வேண்டும்.
இதன்மூலம் பயனர்கள் தாங்கள் உபயோகித்துவரும் டேபை, ரைட் கிளிக் செய்து அதன் பெயர் மற்றும் நிறங்களை மாற்றிக்கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல், டேப்களை குழு அமைத்து கட்டுப்படுத்த முடியும் என்று நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.