தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

Opera Browser: ஆண்ட்ராய்டு செயலியில் ஒபெராவின் இலவச விபிஎன்! - உலாவி

கைப்பேசி புகழ் உலாவி (புரொவுசர்) ஒபெரா தனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு தனிப்பட்ட மெய்நிகர் வலையமைப்பை (VPN - Virtual Private Network) இலவசமாக வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஓபெரா உலாவியின் இலவச விபிஎன் வசதி

By

Published : Mar 22, 2019, 10:31 AM IST

நார்வே நாட்டை தலைமையிடமாகக் கொண்டு விளங்கும் ’ஒபெரா’ இணைய உலாவி 1995ஆம் ஆண்டு தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. கைப்பேசி பயன்படுத்துவோரின் நம்பகத்தன்மையை இவ்வுலாவி வெகுவாகப் பெற்றிருந்தது.

தனது உலாவியின் தரத்தில் அதிக கவனம் செலுத்தும் ஒபெரா, காலத்திற்கேற்ப மேம்படுத்திவருகிறது. அதன் விளைவாக தற்போது தனது பயனர்களின் தகவல்களைப் பாதுகாக்கும் பொருட்டு, மெய்நிகர் வலையமைப்பை இலவசமாக வழங்கவுள்ளது.

உங்களுடைய இருப்பிடத்தை மற்றவர்கள் கண்காணிப்பதைத் தடுக்க உலாவியின் உள்கட்டமைப்பிலேயே இச்சேவையைப் புகுத்தி ’ஆண்ட்ராய்டு ஒபெரா 51’ பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு செயல்திறன் சார்ந்த மேம்பாடுகளை வழங்க ஏற்றதாக புதிய பதிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

விபிஎன் என்னும் மெய்நிகர் வலையமைப்புடைய இச்சிறப்பம்சத்தை ஒபெரா நிறுவனம் முன்னதாக கணினி பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details