தமிழ்நாடு

tamil nadu

ட்விட்டர் திரெட்ஸ் போல ஃபேஸ்புக் பயனர்களுக்கு புதிய அம்சம்!

By

Published : Jul 4, 2021, 5:55 PM IST

ட்விட்டர் தளத்தில் இருக்கும் 'திரெட்ஸ்' போன்ற அம்சத்தினை ஃபேஸ்புக் சோதனை செய்து வருகிறது. இதன்மூலம் முதல் பதிவிற்கு ஏற்ற பிற பதிவுகளையும் தனியாக ஒன்றன்கீழ் ஒன்றாக இணைத்துக் கொள்ளமுடியும்.

பேஸ்புக் அப்டேட்
பேஸ்புக் அப்டேட்

டெல்லி: பேஸ்புக் நிறுவனம் 'ட்விட்டர் திரெட்ஸ்' போன்ற புதிய வடிவிலான அம்சத்தினை தனது பயனர்களுக்கு வழங்க சோதனை மேற்கொண்டு வருகிறது.

சில குறிப்பிட்ட முக்கியப் பிரபலங்களின் பக்கத்தில் 'பீட்டா டெஸ்டிங்' முறையில் இந்தச் சோதனை முயற்சியை ஃபேஸ்புக் செய்துவருகிறது.

ட்விட்டர் திரெட்ஸ்

ட்விட்டர் பயனர்களின் பதிவுகளுக்கு எழுத்து வரம்பினை அந்நிறுவனம் செயல்பாட்டில் வைத்திருந்தது. இந்த வரம்பினை உயர்த்தவேண்டும் எனப் பயனர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

டேட்டா முடியப்போகிறதா: ஜியோ வழங்கும் அட்டகாசமான டேட்டா கடன்!

அதனை ஏற்றுக்கொண்ட ட்விட்டர் நிறுவனம், 'திரெட்ஸ்' எனும் அம்சத்தினை நிறுவியது. இதன் வாயிலாகப் பயனர்கள் தங்கள் முதல் பதிவைத் தொடர்ந்து, அதன் கீழாகப் பல பதிவுகளை உள்ளீடு செய்ய முடியும். இந்த அம்சம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஃபேஸ்புக் சோதனை

இச்சூழலில், ட்விட்டருக்கு நேரடி போட்டியாளராக இருக்கும் ஃபேஸ்புக் நிறுவனமும், இந்த அம்சத்தினை தங்களின் பயனர்களுக்கு வழங்க முடிவுசெய்துள்ளது.

அதன்படி அதற்கான சோதனை முயற்சிகளை ஃபேஸ்புக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details