தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

2021 ஜூன் வரை அனைத்து அலுவல் கூட்டங்களும் ரத்து: ஃபேஸ்புக் அறிவிப்பு! - அலுவல் கூட்டங்களை ரத்து செய்த ஃபேஸ்புக்

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 2021ஆம் ஆண்டு ஜூன் வரை திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அலுவல் கூட்டங்களையும் ஃபேஸ்புக் நிறுவனம் ரத்துசெய்துள்ளது.

facebook-cancels-all-large-physical-events-till-june-2021
facebook-cancels-all-large-physical-events-till-june-2021

By

Published : Apr 17, 2020, 3:32 PM IST

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தங்களது அலுவலக கூட்டங்களை 2021ஆம் ஆண்டு ஜூலை வரை டிஜிட்டல் வழியில் நடக்கும் என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ஃபேஸ்புக் நிறுவனமும் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் எவ்வித தொழில்சார் கூட்டங்களும் நடக்காது என அறிவித்துள்ளது.

இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பேசுகையில், ''2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து தொழில்சார் கூட்டங்களும் ரத்துசெய்யப்படுகின்றன. இவற்றை டிஜிட்டல் முறையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுவருகின்றன. அதுபற்றி அறிவிப்புகள் பின்னர் வெளியாகும்.

ஃபேஸ்புக் நிறுவனத்தில் தீவிரவாதத் தடுப்பு, தற்கொலைகள் ஆகிய கருத்துகள் குறித்து விமர்சிக்கும் பிரிவில் பணிபுரியும் சில ஊழியர்கள் மட்டுமே சில மாதங்களில் அலுவலகத்திற்குத் திரும்புவார்கள். மற்ற ஊழியர்கள் அனைவரும் தங்களது வீட்டிலிருந்தே அனைத்து வேலைகளையும் முடிக்க முடியும் என்பதால் நிதானமாக அலுவலகத்திற்கு திரும்பலாம்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:'ஃபேஸ்புக்கை முடக்க அமெரிக்க தலைவர்கள் சதி?'

ABOUT THE AUTHOR

...view details