சான் பிராசிஸ்கோ: புதியதாக ஆப்பிள் நிறுவனம் வழங்கவிருக்கும் ஐஓஎஸ் 14 இயங்குதளத்தின் பதிப்பில், ஆகுமெண்டட் ரியாலிட்டி(ஏ.ஆர்) மூலம் இயங்கும் கோபி செயலியை நிறுவியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் "என் செயலியை கண்டுபிடி" (Find my App) என்னும் செயலியிலும் புதிய ஏ.ஆர் தொழில்நுட்பம் புகுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அருகில் இருக்கும் பொருட்கள், நடைபெறும் நடவடிக்கைகள் ஆகியவற்றை கணித்து பயனர்களுக்கு அதன்மூலம் தகவல்களை மேம்படுத்தி யதார்த்த காட்சியமைப்பிற்கு கொண்டுச் சேர்க்கும்.
புதிய துல்லிய நிற அமைப்பு தொழில்நுட்பங்களுடன் வெளிவருகிறது ஹானர் ஸ்மார்ட் டிவி!