ஐபோன் தயாரிப்பாளரின் அதிகாரப்பூர்வ டிக்டாக் கணக்கை @Apple என்ற ஐடி மூலம் அணுகலாம். இந்த கட்டுரையை எழுதும் நேரத்தில் இந்த பக்கத்தில் 3822 பின்தொடர்பவர்கள் இருந்தனர். ஆப்பிள் நிறுவனம் இதுவரை நிறுவனம் குறித்த தகவலை (Bio) இந்த தளத்தில் பகிரவில்லை.
அதேபோல், நிறுவனம் இன்னும் தனது டிக்டாக் பக்கத்தில் எந்தவொரு காணொலியையோ அல்லது படத்தையோ பகிரவில்லை. மேலும் நிறுவனம் என்ன மாதிரியான தகவல்களை இந்த தளத்தில் பகிரும் என்பதை பார்க்க, ஆப்பிள் வாடிக்கையாளர்களும், செய்தியாளர்களும் ஆர்வமாக உள்ளனர். ஒரு யூகம் என்னவென்றால், ஆப்பிள் தனது டிக்டாக் பக்கத்தை ஐபோன் விளம்பரங்களை காண்பிப்பதற்காக பயன்படுத்தக்கூடும், இது இன்ஸ்டாகிராமைப் பொறுத்தவரை 23.2 மில்லியன் பின்தொடர்பவர்களையும் 600க்கும் மேற்பட்ட இடுகைகளையும் கொண்டுள்ளது.
உங்கள் இருப்பிடத்தை இனி மறைக்க இயலாது! - ஃபேஸ்புக்
மற்றொரு சாத்தியம் என்னவென்றால், நிறுவனம் தனது டிக்டாக் கணக்கை ஒரு வணிகக் கணக்காகப் பயன்படுத்தலாம். அது தனது ட்விட்டர் கணக்கைப் பயன்படுத்துவது போல் இதையும் பயன்படுத்தக்கூடும். ஐபோன் தயாரிப்பாளரும் டிக்டாக்கில் ஒரு விளம்பர பரப்புரையை நடத்தி வருவதாகவும், எனவே இது புதிதாக வடிவமைக்கப்பட்ட டிக்டாக் கணக்கு அதன் ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என்றும் அந்த வெளியீடு கூறுகிறது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ஆப்பிள் அதுவாக ஏதேனும் இடுகையைப் பதிவு செய்யும் வரை அனைத்தும் யூகங்களாகவே இருக்கும். முன்பு குறிப்பிட்டது போல், ஆப்பிள் மட்டுமே சமீபத்தில் டிக்டாக்கில் அறிமுகமான ஒரே நிறுவனம் அல்ல. கரோனா வைரஸ் குறித்த போலி செய்திகளைக் கையாளும் முயற்சியில் உலக சுகாதார மையம், இந்தாண்டு பிப்ரவரி இறுதியில் டிக்டாக்கில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.