பொதுவாக இணையதளங்களில் விலங்குகள் லூட்டியடிக்கும் காணொலி, புகைப்படங்கள் வைரலாவது வழக்கம்தான். அதிலும், பூனைக்கென்று எப்போதும் தனி இடமுண்டு. அந்த வகையில், ஆர்வக்கோளறு பூனை ஒன்று தற்போது ட்விட்டரை கலக்கிவருகிறது.
வடிவேல் மாதிரி ஸ்விட்ச் போர்டுக்குள் தலையை விட்டு வாங்கி கட்டிகிட்ட பூனை! - CAT TRENDING
ஸ்விட்ச் போர்டுக்குள் தலையைவிட்டு நல்வாய்ப்பாக உயிர்தப்பிய பூனை ஒன்றின் புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகிவருகிறது.
பூனை
கருகருவென காட்சியளிக்கும் இந்தப் பூனை ஸ்விட்ச் போர்ட்டுக்குள் தலையைவிட்டுள்ளது. அப்போது ஷாக் அடிக்கவே தலையிலிருந்த முடியெல்லாம் சிலிர்த்துபோல் நின்றுகொண்டு பூனை பார்ப்பதற்கே நகைச்சுவையாக காட்சியளிக்கிறது.
நல்வாய்ப்பாக உயிர்தப்பிய இந்தப் பூனையின் புகைப்படங்களை அதன் உரிமையாளர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
Last Updated : Aug 10, 2019, 3:23 PM IST