கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் இந்தியத் தயாரிப்பு எஸ்யூவி ரக செல்டோஸ் வாகனத்தின் விற்பனைக்கான உற்பத்தியை ஆந்திரப் பிரதேச மாநிலம், ஆனந்தப்பூர் ஆலையில் தொடங்கப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி விற்பனைக்கு வரவிருக்கும் செல்ட்டோஸ் காரின் முன்பதிவு எண்ணிக்கை தற்போது வரை 23ஆயிரத்தை கடந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் நாளிலே 6406 முன்பதிவுகளைப் பெற்றிருந்தது.
பயனர்கள் சந்தைக்கு சீறிட்டு வந்தது ‘கியா செல்டோஸ்’ பிஎஸ்-6 என்ஜின் உள்ள இந்த மாடலில் மொத்தமாக மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன் அனைத்து என்ஜின் தேர்வுகளில் கிடைக்க உள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கலாம். இதுதவிர, 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கூடுதலாக டியூவல் கிளர்ட்ச் ஆட்டோ கியர்பாக்ஸூடன் இடம் பெற்றிருக்கும். ஆறு காற்று பைகள் பாதுகாப்பு அம்சத்திற்காகப் பொருத்தப்பட்டுள்ளது.
37 விதமான கனெக்ட்டிவிட்டி அம்சங்களைப் பெற்றுள்ள 10.25 அங்குல இன்ஃபோடெயின்மண்ட் அமைப்பில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகள் UVO என்ற பெயரில் இணைக்கப்பட்டுள்ளது. Tech Line மற்றும் GT Line என இரு விதமான வேரியண்டுகளில் வரவுள்ளது. இதில் கூடுதல் பாதுகாப்புக்காகவும், பார்க்கிங் வசதிக்காகவும் 360 டிகிரி படக்கருவி பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.