காற்றின் வேகம், திசை, மாறிவரும் பருவநிலை உள்ளிட்ட பல தகவல்கள் நம்மை இயற்கை பேரிடர்களிலிருந்து தற்காத்துக்கொள்ள உதவும். இந்த வானிலைத் தகவல்களை தருவதற்கும் ஒவ்வொரு நாட்டிலும் வானிலை மையங்கள் இருக்கின்றன. இவை சிலவற்றை கணித்தும், சில நேரங்களில் துல்லியமாக கூறுவதனால், பேராபத்து, பேரழிவு போன்றவற்றிலிருந்து நம்மை தற்காத்துகொள்ள முடியும்.
இந்த தகவல்கள் ஒரு நாட்டில் மட்டுமின்றி எல்லா நாடுகளுக்குமிடையே வானிலை தொடர்பான தகவல்கள், அது சம்பந்தமாக தொழில்நுட்பம், ஆதாரத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு, அதன்மூலமாக வானிலை விவரங்களை வளர்த்துக்கொள்ள உலக நாடுகள் இடையே ஒரு ஒத்துழைப்பு தேவைப்பட்டது.