பூரி (ஒடிசா): கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாக பூட்டப்பட்டிருந்த நிலையில் பூரி ஜெகன்நாதர் ஆலயம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. எனினும் கோயிலுக்குள் பூ, துளசி உள்ளிட்ட பொருள்கள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உலக புகழ்பெற்ற ஜெகன்நாதர் ஆலயம் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டு பொதுமக்களின் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கோயில் மீண்டும் இன்று திறக்கப்பட்டது. இக்கோயிலில் முதல் மூன்று நாள்களுக்கு (டிச.23,24,25) கோயிலில் சேவை செய்யும் நபர்களின் குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இதேபோல் டிசம்பர் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பூரி நகராட்சி பகுதியில் உள்ள நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அடுத்து ஆங்கில புத்தாண்டு வருவதாலும், பொதுமக்களின் கூட்டத்தை தவிர்க்கும் வகையிலும் ஜனவரி1, 2ஆம் தேதிகளில் கோயில் நடை மூடப்படும்.
இந்நிலையில் ஜனவரி 3ஆம் தேதி முதல் பொதுமக்கள் வழக்கம்போல், கோயிலில் வழிபாடு நடத்தலாம். எனினும் கோவிட்-19 பெருந்தொற்று காலம் என்பதால், பொதுமக்கள் கட்டாயம் 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கோவிட் நெகடிவ் சான்றிதழ் அவசியம் என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. எனினும் கோயிலுக்குள் பூ, துளசி உள்ளிட்ட பொருள்கள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
பூரி ஜெகன்நாதர் ஆலயத்தில் கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் உடன்பிறப்பு தெய்வங்களான பாலபத்திரா, தேவி சுபத்ரா ஆகியோரை தரிசிக்கி உள்ளனர்.
இதையும் படிங்க: பூரி கடற்கரையில் சிவனின் சிற்பங்கள்