ருத்ரபிரயாக் (உத்ராகண்ட்): கேதர்நாத் சிவன் கோயிலில் தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு, சிறிய வடிவிலான சிவலிங்கம் பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், கேதர்நாத்அமைந்திருக்கும் நகரத்தில், பராமரிப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதால், பக்தர்கள் ஆதி குரு சங்கராச்சாரியாரின் நிறைவு செய்யப்பட்ட சமாதி இடத்தைப் பார்க்கவும், புதுப்பிக்கப்பட்ட மூன்று குகைகளில் தியானிக்கவும் முடியும்.
இங்கு பிரசாதமாகக் கொடுக்கப்படும் சிவ லிங்கமானது, மந்தாகினி, சரஸ்வதி ஆறுகளில் இருந்து எடுக்கப்படும் கற்களைக் கொண்டு சிவ லிங்கங்கள் உருவாக்கப்படுகிறது. பின்னர் புனித கங்கா ஆற்று நீரில் சுத்தம் செய்யப்பட்டு, லிங்க வடிவில் யாத்ரீகர்களுக்கு கொடுப்பதற்காகச் செதுக்கப்படுகிறது.
இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தனியார் கட்டுமான நிறுவனத்தால், அடுத்த ஆண்டு கோயில் திறக்கப்படுவதற்கு முன்னர், சுமார் ஒரு லட்சம் சிவ லிங்கங்கள் வரை தயாரிக்கப்படும் என்று கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.