லக்னோ:பண்டிகை காலத்தில் ஒவ்வொருவரும் தனது குடும்பத்தினர் அல்லது அன்பானவர்களுடன் தங்களின் நேரத்தை செலவிடுவார்கள். ஆனால் இராணுவ வீரர்கள் தேச பாதுகாப்பு முதல் திருவிழா, பேரழிவு என எது வந்தாலும் இரவும்-பகலும் அயராது உழைக்கின்றனர்.
இந்த இராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், அவர்கள் குறித்து மேலும் அறிந்து கொள்ளவும், உத்தரப் பிரதேசம், லக்னோவில் உள்ள மோகன்லால்கஞ்ச் இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படை (ஐடிபிபி) முகாமுக்கு ஈடிவி பாரத் குழுவினர் சென்றனர்.
அங்கு, “ஹிம்வீர்” எனப்படும் தீபாவளியை ஈடிவி பாரத் குழுவினர் இராணுவ வீரர்களுடன் இணைந்து கொண்டாடினார்கள். இராணுவ வீரர்கள் ஆடல், பாடலுடன் கொண்டாட்டங்களும், வேண்டுதல்களும் நடத்தினார்கள்.