கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பகுதியைச் சேர்ந்தவர் கமலம் (65) . கணவர் இறந்த நிலையில், தனது மூத்த மகளான பெருஞ்சிலம்பு பகுதியில் வசித்து வரும் ராஜம் (45) என்பவர் வீட்டில் தனியாக கொட்டகை அமைத்து வசித்து வந்தார். இவர் நாள்தோறும் மலைப்பகுதியில் விறகு வெட்டும் பணிக்குச் சென்று விட்டு மாலை வீடு திரும்புவது வழக்கம்.
அதேபோன்று இன்று காலை விறகு வெட்டும் பணிக்கு செல்லும்போது, அங்கே வந்த இளைஞர் ஒருவர் மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்து தப்பியோடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் உடனடியாக கொற்றிகோடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மூதாட்டியை கொலை செய்தது அவரது மூத்த மகளான ராஜம் என்பவரின் மூத்த மகளான மாரியம்மாளின்) என்பவரது கணவர் ராஜா(30) என்பது தெரிய வந்தது.